மனித முகம்… மீன் வால்
அரிய மம்மி

212
Advertisement

மனித முகம், மீன் வால் உள்ள அரிய மம்மி
ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விநோதத் தோற்றம் கொண்டுள்ள அந்த மம்மியில்
30 செ.மீ நீளம் உள்ளது. முடிகள், பற்கள், நகங்கள்
உள்ளன. 30 செ.மீ நீளமுள்ள, 300 ஆண்டுகள் பழமையான
அந்த மம்மி மெர்மெய்ட் மம்மி என்று அழைக்கப்படுகிறது.

விஞ்ஞானிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள விநோதத்
தோற்றம்கொண்டுள்ள மம்மி கடலில் மீன்பிடிக்கும்போது
கிடைத்ததாகக் கருதப்படுகிறது. தற்போது ஜப்பான்
நாட்டின் ஹோன்ஷு தீவிலுள்ள ஒகயாமா கோவிலில்
கடந்த 40 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது.

அதற்குமுன்பு ஒரு குடும்பத்தினர் வைத்திருந்ததாகவும்,
பின்னர் வேறொருவருக்கு அனுப்பப்பட்டதாகவும்
கூறப்படுகிறது.

இந்த மம்மியைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட
கிருமிநாசினிகள் மற்றும் இரசாயனங்கள் குறித்து
தற்போது ஜப்பானிய விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து
வருகின்றனர்.