ஷாப்பிங் செல்வதற்கு கணவனை நாய்ச்சங்கிலியால் கட்டி இழுத்துச்சென்ற மனைவியின் புகைப்படம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த லூனா கஸாக்கி என்னும் பெண் தன் கணவரான ஆர்த்தர் ஓ உர்ஸோவுக்குத் தோல் துணிகளை உடுத்தி, முகத்தில் நாய் போன்ற கவசத்தை அணிவித்து, கழுத்தில் பட்டையை மாட்டி அதில் இரும்புச் சங்கிலியைக்கட்டிக் கூட்ட நெரிசலான ரயில் நிலையத்தின் வழியே இழுத்துச்சென்றுள்ளார்.
அத்துடன் சந்தை, பேக்கரி உள்ளிட்ட பொது இடங்களுக்கும் அழைத்துச்சென்றுள்ளார். லூனா பின்னாலேயே வந்த அவரது கணவரும் நாய்போலவே சைகளைச் செய்துவந்துள்ளார்.
இதுபற்றிக் கூறியுள்ள அவர்கள் இருவரும், எங்களுக்குள் காதல் அதிகரிக்கவே இப்படிச் செய்தோம். இதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எங்களுக்குக் கவலையில்லை.
மற்றவர்களுக்கு எவ்விதக் காயத்தையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை. சட்டத்துக்கு விரோதமாக நாங்கள் எதையும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், இது போட்டோ சூட்டுக்காக நடத்தப்பட்டதாகப் பின்னர் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.