ஒவ்வொரு ஆண்டும் கத்திரி வெய்யில் என்னும் அக்னி நட்சத்திரம் மார்ச் முதல் ஜூன் வரை கொளுத்தி எடுக்கும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிப்ரவரி முதலே வெய்யில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட இந்தாண்டு அதிகளவில் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே பல இடங்களில் 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வாினிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தாண்டின் கத்தரி வெய்யில் எனும் அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை நீடிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட வெய்யில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.