விண்வெளிக்கு சுற்றுலா செல்வது எப்படி?

203
Advertisement

விண்வெளிக்கு எப்படிச் செல்வது? எல்லாரும் அங்கு செல்ல முடியுமா?
விண்வெளிக்குச் செல்ல என்ன தேவை என்பது போன்ற கேள்விகள்
பலரின் மனதில் தோன்றும்.

விண்வெளிக்குச் செல்ல முதலில் பணமும் சிறிது
பொறுமையும் தேவை.

விண்வெளிக்குச் செல்ல ஆரோக்கியமான நபர்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவார்கள். சுற்றுலா செல்வதற்குமுன் பயணிகளுக்கு
ஐந்து நாட்கள் இதுதொடர்பாகப் பயிற்சி அளிக்கப்படும்.

பயணத்துக்கு முந்தைய நாள் பயணம் தொடர்பான
தகவல்களை நிறுவனம் தெரிவிக்கும்.

விண்வெளிக்குச் செல்வதற்கான வாய்ப்புகளை இரண்டு
நிறுவனங்கள் ஏற்படுத்தித் தருகின்றன.

ஜெஃப் பெஜோஸின் புளூ ஆரிஜின் மற்றும் வர்ஜின் கேலடிக் ஆகிய
இரண்டு நிறுவனங்கள் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை
அழைத்துச் செல்கின்றன.

இதற்காக புளூ ஆரிஜின் செங்குத்தாகச் செல்லும் ராக்கெட்டுகளை
வைத்துள்ளது. இதில் மூன்று பாராசூட்டுகள் உள்ளன. பூமியிலிருந்து
சுமார் 100 கிலோமீட்டர் தொலைவு உயரமாகச் சென்றுவிட்டுப்
பூமிக்குத் திரும்பும் வகையில் இந்த சுற்றுலா நடைபெறுகிறது.

வர்ஜின் கேலடிக் நிறுவனம் மிகப்பெரிய விமானத்தை இந்த
விண்வெளி சுற்றுலாவுக்குப் பயன்படுத்துகிறது. இது விமானம்போல்
கிடைமட்டமாகப் புறப்பட்டு விண்வெளிக்குச் செல்கிறது.

விண்வெளியில் சில நிமிடங்கள் வரை மட்டுமே விமானத்தில் இருக்கலாம்.
அங்கு புவியீர்ப்பு விசை இல்லை என்பதால் எடையற்ற தங்களின் உடம்பை
உணரலாம். அங்கிருந்தபடி பூமியையும் பார்த்துப் பரவசம் அடையலாம்.

2022 ஆம் ஆண்டிலிருந்து வணிக நோக்கில் விண்வெளிக்கு சுற்றுலாப்
பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று இந்த நிறுவனம்
அறிவித்துள்ளது. இந்த விண்வெளி சுற்றுலாவுக்கு இதுவரை 600பேர்
டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டனர் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருடத்துக்கு 400 விமானங்கள் இயக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2024க்கான 300 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
2025 ஆம் ஆண்டுக்கான டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 1 ஆம் தேதிவரை
நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.

2 லட்சம் டாலர் முதல் இரண்டரை லட்சம் டாலர் வரை ஒரு
பயணிக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தக்
கட்டணம் அதிகரிக்கும் என்றும் இந்நிறுவனம் கணித்துள்ளது.