தேர்வில் தோல்வி அடைவது எப்படி? ஐஏஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ

252
Advertisement

ஐஏஎஸ் தேர்வில் தோல்வி அடைவது எப்படி என்பது குறித்து ஐஏஎஸ் அதிகாரி ஒருவரே பதிவிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

2009 ஆம் ஆண்டு பேட்ஜைச் சேர்ந்த அவனிஷ் சரண் என்ற சத்தீஸ்கர் மாநில ஐஏஎஸ் அதிகாரிதான் இந்த வைரல் வீடியோவைத் தன்னுடைய ட்டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாநிலப் பணிகளில் மட்டுமன்றி, மத்திய அரசிலும் பணிபுரிய வாய்ப்புள்ளதாலும் அதிகாரங்கள் நிறைந்த பதவி என்பதாலும் ஐஏஎஸ் பதவி பெருமை நிறைந்ததாக இருக்கிறது.

ஆனால், இந்தப் பதவிக்காக நடத்தப்படும் தேர்வில் வெற்றிபெறுவது கடினமாக இருக்கும். அந்தத் தோல்வியைத் தவிர்க்கும்பொருட்டு ஐஏஎஸ் அதிகாரி ஒருவரே என்னென்ன தவறுகளால் ஐஏஎஸ் அதிகாரியாகத் தேர்வுபெற முடியாமல் போய்விடுகிறது என்பதை விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ யுபிஎஸ்சி தேர்வு எழுதும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

IAS, IPS, IFS உள்ளிட்ட 28க்கும் அதிகமான பதவிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் UPSC ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி வருகிறது. முதல்நிலைத் தேர்வு, இரண்டாம் நிலைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளாக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

மூன்று நிலைத் தேர்வுகளிலும் தேர்ச்சிபெறும் விண்ணப்பதாரரே ஐஏஎஸ் பதவிக்குத் தேர்வுசெய்யப்படுவார். அதற்குமுன் தேர்வாகியுள்ளவர் பற்றிய காவல்துறை குறிப்புக்குப் பின்னர் பயிற்சிக்கு அழைக்கப்படுவார். ஓராண்டு பயிற்சிக்குப்பின் பணியமர்த்தப்படுவது ஐஏஎஸ் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பதவிகளில் அமர்த்தப்படுவது வழக்கமாக உள்ளது.

தற்போது இந்த வீடியோ இணையதளவாசிகளையும் யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களையும் கவர்ந்துவருகிறது.