Monday, July 28, 2025

பட்டா ,சிட்டாவை ஆன்லைன்னில் பதிவிறக்கம் செய்வது எப்படி? தமிழக அரசின் மாஸ் அப்டேட்!

தமிழக அரசு பொதுமக்களுக்கான ஒரு முக்கியமான ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நில உரிமையாளர்களுக்கு அவசியமான பட்டா மற்றும் சிட்டா ஆவணங்களை எளிதாகப் பெற வாய்ப்பு வழங்குகிறது. முன்னதாக, இதற்காக அரச அலுவலகங்களை நேரடியாகச் செல்லவேண்டிய நிலை இருந்தது, ஆனால் தற்போது இணையதளத்தின் மூலம் எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும் இவை பெற முடிகிறது.

பட்டா என்பது நில உரிமையை நிரூபிக்கும் சட்டப்பூர்வ ஆவணமாகும், இதில் நில உரிமையாளரின் பெயர், நில அளவு, உரிமையின் வகை, சர்வே எண் மற்றும் பல விவரங்கள் உள்ளடங்கியிருக்கும். சிட்டா, பட்டாவின் விரிவான பதிப்பாக, நிலம் எங்கு அமைந்துள்ளது, அதன் பயன்பாடு, நில உரிமையாளர் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குகிறது.

இந்த ஆன்லைன் சேவையின் மூலம், நில உரிமையாளர்கள் விற்பனை, கடன் பெறல் அல்லது இயற்கை சீற்றம் அல்லது அரசு நிலத்தை பறிமுதல் செய்தால், இவற்றை ஆன்லைனில் பெற முடியும். இதன் மூலம் நேரமும் பணமும் மிச்சமாகி, இடைத்தரகர்களுக்கு செலுத்த வேண்டிய பணமும் குறைகின்றது.

தமிழக அரசு புதிய இ-சர்வீஸ் மூலம் பொதுமக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இவையுள்ள முக்கிய ஆவணங்களை பெற முடிகிறது.

எப்படி பெற வேண்டும் என்றால்,

முதலில் , eservices.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செல்ல வேண்டும்.

பிறகு பட்டா அல்லது சிட்டா விவரங்களை பார்வையிட “பட்டா & புலப்படம் / சிட்டா / நகர நில அளவைப் பதிவேடு” ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

அடுத்ததாக மாவட்டம், வட்டம், கிராமம், பட்டா / சிட்டா விவரங்களை பூர்த்தி செய்துகொண்டு அங்கீகார மதிப்பை உள்ளிடவேண்டும்.

பின்னர் OTP மூலம் உறுதிப்படுத்தியதற்கு பிறகு, விவரங்களை பார்வையிடலாம் மற்றும் “Print” ஆப்ஷனில் கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த ஆன்லைன் வசதிகள், தனிநபர்களுக்கு, குறிப்பாக நில உரிமையாளர்களுக்கு, மிகுந்த உதவியாக இருக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News