Friday, August 22, 2025
HTML tutorial

ரசாயன கலப்படம் இல்லாத மாம்பழங்களை வாங்குவது எப்படி?

செயற்கையாக வளர்க்கப்படும் மாம்பழங்கள் அனைத்தும் ஒரே நிறத்தில், ஓரளவு சீரானதாக இருக்கும். அதேபோல், அவை மிகவும் மஞ்சள் நிறத்தில் தோன்றமளிக்கும். இயற்கையாகப் பழுத்த பழங்கள் சில இடங்களில் பச்சை நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.

இயற்கையாகவே பழுக்கும் பழங்கள் சற்று இனிமையான நறுமணத்துடன் பழ வாசனையைக் கொண்டிருக்கும். ரசாயனத்தைப் பயன்படுத்தி பழுக்கவைக்கப்படும் மாம்பழங்கள் சற்று ரசாயன வாசனையையும், வித்தியாசமான வாசனையையும் கொண்டிருக்கும். அப்படி வாசனை வரும் மாம்பழங்களை வாங்க வேண்டாம்.

ரசாயனங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்படும் அல்லது பழுக்கவைக்கப்படும் பழங்கள் சாப்பிடுவதற்கு அவ்வளவு சுவையாக இருக்காது. இயற்கையாக விளையும் பழங்கள் பொதுவாக இனிப்பாகவும், சுவையாகவும் இருக்கும். எனவே, சுவையை வைத்தும் நீங்கள் அவற்றை அடையாளம் காணலாம்.

ரசாயனங்களைப் பயன்படுத்தி வளர்க்கப்படும் பழங்கள் வெளிப்புறத்தில் கறைகள் நிறைந்திருக்கும். இயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களில் அந்த அளவு இருக்காது.

சிறிது சமையல் சோடா கலந்த தண்ணீரில் இந்தப் பழங்களை கழுவ முயற்சிக்கவும். அதன் நிறம் மாறினால், மாம்பழங்கள் ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்டுள்ளன என்று அர்த்தம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News