எறும்புக்கு எத்தனைக் கால்கள்…?

706
Advertisement

குழுவாக வாழும் குணம்கொண்டவை எறும்புகள்.
ஒவ்வொரு குழுவிலும் இனப் பெருக்கத் திறன்கொண்ட
ஒன்று அல்லது சில பெண் எறும்புகளும், சோம்பேறி
எனப்படும் ஆண் எறும்புகளும் இருக்கும.

எறும்புக்கு ஆறு கால்கள்.. தென்பனிமுனைப்
பகுதிகளில் எறும்புகள் வசிப்பதில்லை என்று
கூறப்படுகிறது.

இனப்பெருக்கம் திறன்கொண்ட எறும்புகள் பெண்
எறும்புகள் அரசி எறும்புகள் என்றும், இனப்பெருக்கத்
திறன்கொண்ட ஆண் எறும்புகள் சோம்பேறி எறும்புகள்
என்றும் அழைக்கப்படுகின்றன.

இவையிரண்டும் இனப் பெருக்கம் செய்வதையே
முக்கியப் பணியாகச் செய்கின்றன.

இனப் பெருக்கத் திறனற்ற எறும்புகள் வேலையாட்களாகவும்,
இனப் பெருக்கத் திறனற்றப் பெண் எறும்புகள் போராளி
எறும்புகளாகவும் கருதப்படுகின்றன.

இந்த வேலையாட்கள் எறும்புகளும் போராளி எறும்புகளும்தான்
உணவு சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

காற்று, மின்சாரம், அதிர்வு, வேதிப்பொருட்கள் ஆகியவற்றை
உணரும் உறுப்பு எறும்புகளுக்கு உள்ளது.

அரசி எறும்பு 30 வருடம்வரையும், வேலையாட்கள் எறும்பு 3
வருடம்வரையும், ஆண் எறும்புகள் சில மாதங்கள்வரையும்
உயிர் வாழ்கின்றன.

ஓர் எறும்புக் கூட்டில் சில நூறு எறும்புகள்முதல் பல லட்சம்
எறும்புகள்வரை வாழ்கின்றன.

சிறந்த மோப்ப சக்தியும் கண் பார்வையும் உடையவை எறும்புகள்.

தங்கள் உடல் எடையைவிட 50 மடங்கு சுமையை சுமந்துசெல்லும்
திறன்கொண்டவை எறும்புகள். பகல் முழுவதும் இரை தேடும்
எறும்புகள் இரவில் தங்கள் கூட்டுக்குத் திரும்பிவிடும்.

பூகம்பம், நிலநடுக்கத்தை முன்கூட்டியே உணரும் ஆற்றல்
கொண்டவை எறும்புகள். நிலநடுக்கத்துக்கு ஒரு நாளைக்கு
முன்பே தங்கள் கூட்டைவிட்டு எறும்புகள் வெளியேறிவிடும்.

ஓரிடத்தில் உணவு இருப்பதை எறும்பு பார்த்துவிட்டால், தன்
தலையிலுள்ள ஆன்டனா போன்ற உறுப்பால் அந்த இரையைத்
தொட்டுப் பார்க்கும். உடனே, தன் உடலின் பின்பகுதியிலுள்ள
ஃபெரமோன் என்னும் வேதிப்பொருளைக் கோடுபோல
போட்டுக்கொண்டே செல்லும்.

இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகள் உணவிருக்கும்
இடத்தை எளிதில் கண்டறிந்து வந்துவிடுகின்றன. தாங்கள்
சேகரித்து வைக்கும் உணவுப் பொருட்கள் கெடாமலிருக்க
ஒருவகை இரசாயனத்தைப் பயன்படுத்துவதாகக் கண்டறிந்து
உள்ளனர்.

நோய்க் கிருமிகள் தங்களைத் தாக்கமலிருக்க தங்கள் உடலிலிருந்து
ஒருவகைத் திரவத்தை சுரந்து உடல் முழுவதும் மட்டுமன்றி, கூடுகளின்
சுவர்களிலும் பூசுகின்றன… தமக்கு எதிரி என்று கருதுபவற்றைக்
கடிக்கும்போது அவற்றின் உடலிலிருந்து இரசாயனம் சுரக்கும்.

அந்த இரசாயனமே மனிதர்களுக்கு வலியைக் கொடுக்கிறது.
இரசாயனத்தின் வீரியம் குறைந்ததும் வலியும் குறைந்துவிடுகிறது.

ஒவ்வொரு எறும்புக் கூட்டின் வாசலிலும் ஒரு காவலாளி எறும்பு
இருக்கும். இந்தக் காவலாளி எறும்பு மற்ற எறும்புகளை முகர்ந்து
பார்த்து தங்கள் கூட்டத்தைச் சேர்ந்த எறும்பை மட்டுமே கூட்டுக்குள்
அனுமதிக்கும்.

மனிதர்களைப்போல இறந்தவுடன் தங்கள் உடல்களைப்
புதைத்துவிடுகின்றன எறும்புகள்.

தங்கள் பணிகளைப் பிரித்து மேற்கொள்கின்றன.
அவ்வப்போது தங்களுக்குள் கூடிப்பேசி மகிழ்கின்றன எறும்புகள்.

நாமும் எறும்புகளைப்போல சுறுசுறுப்பாகச் செயல்படுவோம்.
குழுவாகச் சேர்ந்து பணியாற்றுவோம். நோய்க் காலத்தில் வருமுன்
காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றுவோம். உறவினர்கள்,
நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்ச்சியாக வாழ்வோம்.
நீண்டகாலம் வாழ்வோம்.