Thursday, March 13, 2025

ஜியோ ஹாட் ஸ்டாரில் 10 செகண்ட் விளம்பத்திற்கு இத்தனை லட்சமா?

ஐபிஎல் 2025 சீசன் மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. மே 25 அன்று இறுதிப் போட்டி நடைபெறும். மே 18ம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்க உள்ளது. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் ஜியோ ஹாட்ஸ்டார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் பல கோடிகளை சம்பாதிக்க உள்ளன.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் அம்பானியின் ஜியோ ஹாட்ஸ்டார் நெட்வொர்க் குழுமம் மொத்தமாக ரூ.7,000 கோடி வருமானம் பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

10 செகண்ட் விளம்பரத்திற்கு ரூ.8.5 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் 2025-க்காக ஜியோஸ்டார் ஏற்கனவே பல பிரிவுகளில் 12 ஸ்பான்சர்களைப் பெற்றுள்ளது.

Latest news