Monday, October 6, 2025

உங்கள் பெயரில் எத்தனை போலி சிம் கார்டுகள் உள்ளன? கண்டுபிடிக்காவிட்டால் பெரிய சிக்கலில் மாட்டிக்குவீங்க!

‘TAFCOP’ மூலம் போலி சிம் கார்டுகளை கண்டுபிடிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தற்போது நம் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிந்துகொள்வதற்கு மத்திய தொலைத்தொடர்பு துறை ஒரு வலைத்தளத்தை உருவாக்கி உள்ளது. அது தான் TAFCOP. அதாவது Telecom Analytics for Fraud Management and Consumer Protection என்ற வலைத்தளம் இதற்கு மிகுந்த உதவியாக உள்ளது.

சில சமயங்களில் நம் அறியாமையால், பிறர் நம் அடையாள ஆவணங்களை தவறாக பயன்படுத்தி சிம் கார்டு தகவல்களை எடுத்து கொள்ளும் மோசடி நடக்கின்றன. இதனால் வங்கி மோசடி முதல் பல்வேறு சைபர் குற்றங்கள் வரை நேரிட வாய்ப்பு அதிகம். இதை தடுக்கும் நோக்கத்தில்தான் இந்த வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் பெயரில் உள்ள போலி சிம் கார்டுகளை கண்டறிய முதலில் திரையில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அடுத்ததாக அங்கு உங்கள் மொபைல் ஃபோன் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உள்நுழைய வேண்டும். அதன் பின், அந்த எண்ணுடன் தொடர்புடைய அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் அட்டவணை வடிவில் காட்டப்படும்.

பின்னர் நீங்கள் பயன்படுத்தாத எண்கள் இருப்பின் “This is not my number” என்பதை தேர்வு செய்து புகார் அளிக்கலாம். தொடர்ந்து, புகார் அளித்தவுடன் அந்த எண்ணின் விசாரணை தொலைத்தொடர்பு துறை மூலம் மேற்கொள்ளப்படும்.

ஒருவரின் பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பது விதிமுறை. எனவே, அதற்கும் அதிகமாக எதாவது எண்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அது போலியானதாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த சேவை முற்றிலும் இலவசம். பொதுமக்கள் தங்கள் பெயரில் போலி சிம் கார்டுகள் செயல்படுகிறதா என்பதை அடிக்கடி சரிபார்த்துக்கொள்வது பாதுகாப்புக்கு அவசியம்.

இதற்கென, ‘TAFCOP’ வலைதளம் நம் அடையாள பாதுகாப்புக்கான முக்கிய கருவியாக மாறியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News