PAN என்று சுருக்கமாக அழைக்கப்படும் Permanent account number என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வரி செலுத்துவோரும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ஒரு ஆவணமாக அமைகிறது. PAN கார்டு பற்றி தெரிந்தவர்கள் இருக்கலாம் ஆனால், இன்னும் பலருக்கு இந்த PAN கார்டு பற்றிய முழுமையான தகவல்கள் தெரிவதில்லை.
அதாவது PAN என்பது அனைத்து பொருளாதார சம்பந்தப்பட்ட பணப் பரிமாற்றங்களையும் இணைக்கக்கூடிய ஒரு தனித்துவமான அடையாள அட்டையாக இருக்கிறது. இதில் இந்திய வருமான வரித்துறையினரால் வழங்கப்பட்ட 10 இலக்க எண்கள் மற்றும் எழுத்துக்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இது இந்தியாவில் உள்ள தனிநபர்கள், நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த PAN எங்க தேவைப்படும் என்று கேக்குறீங்களா?
அதாவது ஒரு வருடத்திற்கான வருமான வரியை தாக்கல் செய்யும்போதும், சொத்து வாங்கும்போதும், பெரிய அளவில் பணப்பரிமாற்றங்களை செய்யும்போதும், மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது ஷேர் மார்க்கெட்டுகளில் முதலீடுகள் செய்யும்போது ஒருவருக்கு PAN கார்டு தேவைப்படுகிறது.
சரி, PAN கார்டில் இருக்கும் 10 இலக்க எண் எதற்கு என்று தெரியுமா?
‘ABCDG1406F’ என்ற ஒரு PAN நம்பர் இருப்பதாக உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம்.
இதில் இருக்கக்கூடிய முதல் 3 எழுத்துக்கள் AAA முதல் ZZZ வரை உள்ள எழுத்து வரிசையை குறிக்கிறது.நான்காவது எழுத்தானது PAN ஹோல்டரின் வகையை குறிக்கிறது. அதாவது தனிநபர், நிறுவனம், HUF,BOL, AOP, அரசு நிறுவனம், செயற்கை நீதித்துறை நபர், உள்ளாட்சி அமைப்பு, கூட்டு நிறுவனம் மற்றும் அறக்கட்டளை போன்றவை இதில் அடங்கும் என்கின்றனர்..
இது ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த PAN கார்டு எப்படி வாங்குவது என்பதை பற்றி பார்க்கலாம்..
அதாவது Protean e-Gov website மூலம் பான் கார்டு விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து,விண்ணப்பப் படிவத்தில் கேட்டுள்ள விவரங்களை நிரப்ப வேண்டும் .
அதன் பின்னர், தேவையான ஆவணங்களை அதாவது புகைப்படம், முகவரி சான்று, ஆதார் அட்டை போன்றவற்றை இணைக்க வேண்டும்.அடுத்ததாக பணம் செலுத்தி, விண்ணப்பப் படிவத்தை பரிவுடன் அனுப்பவும்.உங்கள் பான் கார்டு விரைவில் கிடைக்கும்.