Wednesday, August 13, 2025
HTML tutorial

கூலி படம் எப்படி இருக்கு? Review கொடுத்த உதயநிதி ஸ்டாலின்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆக. 14) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் டிக்கெட் முன்பதிவு அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வாழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேம். அவரது நடிப்பில் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை வெளியாகவுள்ள கூலி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

மாஸான பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படத்தை நான் முழுமையாக ரசித்தேன், அனைத்து தரப்பினரின் இதயங்களைக் கவரும் என்று நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். மேலும், படம் வெற்றிபெற இயக்குநர் லோகேஷ், நடிகர்கள் மற்றும் படக்குழு அனைவருக்கும் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News