Wednesday, April 16, 2025

சவுரவ் கங்குலி சொன்னது போல தோனி கேப்டன் ஆனது எப்படி? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..நடந்தது என்ன?

கடந்த மார்ச் 22 தேதி தொடங்கியது IPL திருவிழா.. இதில்  மொத்தம் 10 அணிகள் விளையாடும். சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகியவை போட்டியில் களமிறங்குகி வருகிறது..

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உடன் பொதி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றது அதன் பிறகு தொடர்ந்து 4 போட்டியிலும் தோல்வியை தழுவியது.. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 2025 ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்படுவதாகவும், தோனி கேப்டன் பொறுப்பை ஏற்க இருப்பதாகவும் செய்தி வெளியானது.. இந்த செய்தி வருவதற்கு முன் இதனை குறித்து சவுரவ் கங்குலி பேசியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது..

அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி அதை பற்றி பேசினார். நேற்று மாலை கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சவுரவ் கங்குலி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது CSK அணியில் தோனியின் ஆட்டம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அவர் கூறுகையில்”எம்.எஸ். தோனி எப்போதும் சிக்ஸர்களை அள்ளுபவர். நான் பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் அதை பார்த்தேன். தோனிக்கு 43 வயதாகிறது. அவர் 2005-இல் நான் பார்த்தபோது எப்படி இருந்தாரோ அப்படியே இருப்பார் என நாம் எதிர்பார்க்க முடியாது. அது இயற்கை. ஆனால் அவரிடம்  இன்னமும் சிக்ஸ் அடிக்கும் சக்தி இருக்கிறது.” “தோனியின் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது என எனக்கு தெரியவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை குறித்து என்ன நினைக்கிறது என எனக்கு தெரியவில்லை. ஆனால், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அவர் ஆடியதை நான் பார்த்தேன். சில சிக்ஸர்களை அடித்தார். அது அவரது அனுபவம்தான்.. அவர் இதுவரை என்ன சாதித்தாரோ, இந்த விளையாட்டை எப்படி புரிந்து கொண்டிருக்கிறாரோ அதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு எது நல்லதோ அதை அவர் செய்கிறார். தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார் என்றால் அவர் நிச்சயமாக அந்த அணியின் கேப்டனாக விளையாட வேண்டும். அவர் கேப்டனாக இருந்தால் முற்றிலும் வேறு ஒரு ராட்சசன் போல இருப்பார்” என்று கூறினார் .

அவர் பேசிய செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள் CSK அணியில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் 2025 ஐபிஎல் இருந்து நீக்கப்படுவதாகவும், தோனி கேப்டன் பொறுப்பை ஏற்க இருப்பதாகவும் செய்தி வெளியானது.  கங்குலி சொன்ன வார்த்தைகள் அப்படியே செய்தியாக வெளியானதும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்போது CSK ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சத்தில்  இருக்கிறார்கள்

Latest news