இந்தியாவின் ஐ.டி. தலைநகராக உள்ள பெங்களூருவில் வீட்டு வாடகை விலையில் ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி, சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஒரு Reddit பயனர், “பெங்களூருவில் வாடகை விலை ஏன் இந்த மாதத்தில் இவ்வளவு குறைந்தது?” என்று கேள்வி எழுப்பினர். பலர் அதில் தங்களது அனுபவங்களையும், கவலைகளையும் பகிர்ந்துள்ளனர்.
அதில் அவர்கள் சொல்ல வந்த விஷயம் என்னவென்றால், கடந்த சில மாதங்களாகவே சில ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. மேலும், வீட்டில் இருந்து வேலை செய்யவும் அறிவுறுத்தி வருகின்றன. மேலும், புதிய வேலைவாய்ப்புகள் மந்தமாக இருக்கும் சூழலில், வாடகைக்கு வரும் ஆட்களும் குறைந்து விட்டன.
ஊழியர்களின் பணிநீக்கம், தொழில்நுட்ப துறையின் வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பது, மற்றும் அதிக வாடகை செலவிட விரும்பாத பணியாளர்கள் வீடு வாங்கும் திட்டங்களை ஒத்திவைத்திருப்பது இதற்கு முக்கிய காரணமாகும்.