பாலைவனத்தில் வீடு

116
Advertisement

https://www.instagram.com/p/CQ1kvaLDDBo/?utm_source=ig_web_copy_link

பாலை வனத்தில் கட்டப்பட்டுள்ள வீடு சமூக வலைத்தளத்தில் வைரலானது.

நகர்ப்புற வாழ்க்கை சலித்துவிட்டவர்கள் இங்கே ஒரு வீடு வாங்கி நிம்மதியாக வாழலாம்.

Advertisement

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மொஜாவே பாலைவனத்தின் நடுவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. எல் சிமெண்டோ யூனோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வீடு அனைத்து வசதிகளையும் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

காங்கிரீட் மற்றும் 3 தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் நூலகமும் உள்ளது-

இந்த வீடு ஒன்றின் விலை 12 கோடியே 90 லட்சம்.

ஐந்து ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்பு வசதிகளுடன் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. 10 நிமிட நேரத்தில் இங்கிருந்து அருகிலுள்ள கிராமத்துக்கு கார் அல்லது பைக்மூலம் சென்றுவிடலாம்.

சகல வசதிகள் உள்ளிட்ட காரணங்களுக்காக நகரங்களில் குடியேறுபவர்கள் அநேகம். அதேசமயம், நகர்ப்புறங்களில் படும் சிரமங்களும் அதிகம். ஆனால், நகர்ப்புறங்களில் உள்ள அதே வசதிகளுடன் பாலைவனத்தில் ஒரு வீடு இருந்தால் எப்படியிருக்கும்…..நிம்மதியாக இருக்குமல்லவா? அந்த வீடுதான் இந்த வீடு.