பைக்குகளை திரும்ப வாங்கும் ஹோண்டா நிறுவனம்

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது பிரீமியம் CB1000 Hornet SP மோட்டார் சைக்கிள்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இந்த பைக்குகளில் எக்ஸாஸ்ட் அமைப்பில் இருந்து வரும் அதிக வெப்பம் பெயிண்ட் செய்யப்பட்ட இருக்கையின் மேற்பரப்பை மென்மையாக்கி, கியர் மாற்றும் பெடலின் போல்ட் தளர்ந்து விழும் அபாயம் இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இதனால் ஓட்டுநர்கள் கியர் மாற்றும்போது சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதனை சரி செய்ய ஹோண்டா 2026 ஜனவரி மாதம் முதல் பழுதான பைக்குகளை இலவசமாக ஆய்வு செய்து, தேவையான பாகங்களை மாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த சேவை இந்தியாவின் அனைத்து ஹோண்டா பிக்விங் டாப்லைன் டீலர்ஷிப்புகளிலும் வழங்கப்படும். பைக் வாரண்டி உள்ளதா என சோதனை செய்யபட்டது இந்த சேவை வழங்கப்படும் என கூறியுள்ளது.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் உரிமையாளர் அனுபவம் ஹோண்டா நிறுவனத்தின் முக்கியத்துவமான பகுதிகளாகும். இந்த நடவடிக்கை இதனை தெளிவுப்படுத்துகிறது.

இந்த அறிவிப்பை பயன்படுத்தி உங்கள் CB1000 Hornet SP பைக்கின் நிலையை இந்தியாவின் ஹோண்டா டீலர்களிடம் சரிபார்க்கலாம்.

Related News

Latest News