ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் வெண்ட் (76) நேற்று முன்தினம் காலமானார். என்பிசி தொலைக்காட்சியில் வெளியான ‘சீயர்ஸ்’ என்ற தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்துவந்த இவர், நேற்று முன்தினம் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.