உத்தரப் பிரதேச மாநிலம் காசியபாத்தில் இந்திராபுரம் பகுதியில் கேஎஃப்சி உணவகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த கடைக்குள் புகுந்த இந்துத்துவா கும்பல் அசைவ உணவு விற்கக்கூடாது என அங்குள்ள ஊழியர்களை மிரட்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
இதேபோல் மற்றொரு தனியார் அசைவ உணவகத்தையும் இந்துத்துவா கும்பல் மூட வைத்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.