“மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமில்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் வேறு எந்த ஒரு இந்திய மொழியையும் தமிழக மாணவர்கள் கற்கலாம்.
இந்தி மட்டும் அல்ல வேறு எந்த மொழியையும் மூன்றாவதாக கற்குமாறு மாணவர்களிடம் திணிக்கவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.