Thursday, February 5, 2026

‘ஹாய்…நான் வாட்ஸ்-அப் சப்போர்ட் பேசுகிறேன்’ : இந்த மெசேஜ் வந்தா நம்பாதீங்க..!

கோடிக்கணக்கான பயனர்களை தன்வசமாக்கி, சமூக வலைத்தளத்தில் வாட்ஸ்அப் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி பயனர்களை கவரும் வகையில் புதுப்புது அப்டேட்டுகளை செய்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக வயதானவர்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்து விஷயம் தெரியாதவர்கள் இதுபோன்ற மோசடிகளில் எளிதில் மாட்டிக்கொள்கின்றனர்.

இந்நிலையில் ஹாய்…நான் வாட்ஸ்-அப் சப்போர்ட் பேசுகிறேன்…என்று வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பேசியும் சிலர் நூதன மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற மெசேஜ் வந்தால் நம்ப வேண்டாம், அந்த எண்ணை வாட்ஸ்-அப் செயலியில் பிளாக் செய்துவிட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களை போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களை நேரடியாக தொடர்பு கொள்வதில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். இத்தகைய செய்திகள் மூலம் மோசடி செய்பவர்கள் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை திருட முயற்சிக்கின்றனர்.

வங்கி கணக்கி விவரங்கள், ஓடிபி குறீயிடுகள், பாதுகாப்பு கேள்விகளுக்கு பதில்கள் போன்ற முக்கியமான தகவல்களை பெற்று நிதி மோசடி செய்யலாம் என்பதால் இது மிகவும் ஆபத்தானது.

எனவே வாட்ஸ்அப் மூலம் யாராவது ஏமாற்றப்பட்டால் அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://whatsapp.com/contact/forms/1534459096974129 என்ற முகவரியில் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணில் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News