தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயில் கொளுத்தி வருகிறது.
இந்நிலையில் வெயிலை சமாளிக்க கோவையில் போக்குவரத்துக்கு காவலர்களுக்கு பேட்டரி பேன் வசதி கொண்ட ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட் 36 போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.