இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என புதுச்சேரியில் கடந்த 2017ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த அறிக்கை திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில் 2025 ஜனவரி மாதம் முதல் மீண்டும் கட்டாய ஹெல்மட் திட்டத்தை கொண்டுவர போலீசார் முடிவு செய்துள்ளனர். ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதை நடைமுறைப்படுத்த போக்குவரத்து போலீசார் இறங்கி உள்ளனர்.