திருச்சி பழைய பால் பண்ணை பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், உயிர்ப்பலி வாங்கும் விபத்துகள் நடப்பதாகவும் ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வந்தது.
திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு இன்று (வியாழக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்து உள்ளார்.
திருச்சி மாநகருக்குள் வருகை தரும் கனரக வாகனங்கள் துவாக்குடி – பஞ்சப்பூர் மார்க்கத்தில் செல்ல வேண்டும். பஞ்சப்பூர்- தஞ்சாவூர் நெடுஞ்சாலை வழியாக செல்லும் எல்லா இடைநில்லா பேருந்துகளும் (பாய்ண்ட் டூ பாய்ண்ட் பஸ்கள்) பஞ்சப்பூர்- தஞ்சாவூர் பைபாஸ் (அரைவட்ட சுற்றுச்சாலை) மார்க்கத்தை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
