Monday, December 1, 2025

திருவள்ளூரில் கனமழை- அவசர உதவி எண்கள் அறிவிப்பு

டிட்வா புயலானது சென்னையை நெருங்கி வருவதால் இன்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர உதவிக்கு 7299004456

மருத்துவ தேவை 9384814050

கால்நடை பாதிப்பு 1962

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News