தமிழகத்தில் நேற்று 13 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழகத்தில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அளித்த தகவலின்படி, மதுரை விமான நிலையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் 105 டிகிரி வெயிலும், வேலூரில் 104 டிகிரி வெயிலும், சென்னை மீனம்பாக்கம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் 103 டிகிரி பாரன்ஹீடும் பதிவாகி உள்ளது.

மதுரை நகர்புறத்தில் 103 டிகிரியும், தூத்துக்குடி, திருச்சி மற்றும் திருத்தணியில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து கடலூர், கரூர் பரமத்தி, பரங்கிப்பேட்டை 101, சென்னை நுங்கம்பாக்கத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயிலும் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News