தேனி பெரியகுளம் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் பாஸ்கரன் தேனியிலிருந்து திண்டுக்கல்லுக்கு பயணிகளுடன் அரசு பேருந்தை இயக்கி வந்து கொண்டிருந்தார்.
வத்தலகுண்டு பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்திய அவர், திடீரென இருக்கையில் இருந்தவாறே மயக்கமடைந்து விழுந்தார்.
உடனடியாக அரசு பேருந்து ஓட்டுநரை மீட்டு, பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ஓட்டுநர் சாலையில் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தி பல உயிர்களை காப்பாற்றிய சம்பவம் பொதுமக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.