வேற லெவல் பயன்கள் தரும் வெல்லத் தண்ணீர் குடிச்சு பாருங்க!

367
Advertisement

சக்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக பலரும் பயன்படுத்தக்கூடிய வெல்லத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

குறிப்பாக, குளிர் காலத்தில் வெறும் வயிற்றில் காலையில் வெல்லம் காய்ச்சி குடிக்கும் தண்ணீரால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கின்றன.

ஒரு டம்ளர் நீரை சூடாக்கி அதில் ஒரு இன்ச் அளவிலான வெல்லக்கட்டியை போட்டு கரைத்து வடிகட்டி குடிப்பதால் பின்வரும் பலன்களை பெறலாம்.

பொட்டாசியம் மற்றும் சோடியம் அதிகம் உள்ள வெல்லத்தை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால் எலும்புகள் வலுப்பெறுவதோடு மூட்டு வலியையும் குறைக்க உதவுகிறது.

இரத்தசோகை உள்ளவர்களின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் வெல்ல நீர், இரத்த அழுத்தத்தையும் சீராக பராமரிக்கிறது.

வெவெதுப்பான நீரில் வெல்லத்தை காய்ச்சி குடிப்பதால் இரத்தம் மற்றும் கல்லீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடல் சுத்தமடைவதால் சருமம் பொலிவான தோற்றத்தை பெறும். 

மேலும், வெல்லத்தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள எலெக்ட்ரோலைட் balance எனப்படும் உப்பு சக்கரை அளவுகள் சமன்பாடு இயல்பாகவே பராமரிக்கப்படுகிறது.

மெக்னீசியம்,  B1, B6, C வகை விட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் மினரல்ஸ் உள்ள வெல்லத் தண்ணீரை தொடர்ந்து அதிகாலையில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என இயற்கை மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.