விஜய்யின் பாடலுக்கு நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே பின்னையூரை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர் சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும் வெள்ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியையாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரத்தநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியை கிருஷ்ண வேணி விழா மேடையில் விஜய்யின் பாடலுக்கு நடனமாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
