அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில நாட்களாக உலக நாடுகள் மீது கடும் வரிகளை அறிவித்து வருகிறார். கடந்த வாரம் இந்தியா, சீனா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ரெசிப்ரோக்கல் வரிகள் விதித்தார். இதனால் சர்வதேச வணிகத்தில் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, டிரம்ப் 90 நாட்களுக்கு இந்த வரிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
எனினும், சீனாவுக்கு மட்டும் இந்த விலக்கு கிடைக்கவில்லை. சீனாவுக்கான வரியை 145% உயர்த்தியதால், அமெரிக்காவில் சராசரி வரி 27% ஆக உயர்ந்தது. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவாக பார்க்கப் படுகிறது. சீனாவிலிருந்து வரும் பொருட்கள் இப்போது பெரும் வரிகளை சந்திக்கின்றன.
இதன் விளைவாக, அமெரிக்க பங்குச்சந்தை சரிவடைந்தது. முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களை விற்று தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை 3.5% உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் இந்தியாவில் ரூ.9,671 ஆக ஆனது. இந்த மாற்றங்கள் 1930 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிரமமான பொருளாதார சூழ்நிலையை நினைவூட்டுகின்றன.
டிரம்ப் இப்போது இது குறித்துக் கூறும் போது, இந்த வரிகள் மூலம் அமெரிக்க அரசுக்கு தினமும் 2 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கிறது என்கிறார். இதேபோல், அமெரிக்க வல்லுநர்கள் இதை கடுமையாக எச்சரிக்கின்றனர், சீனாவிலிருந்து வரும் பொருட்கள் குறைந்தால், அந்த வருமானம் குறையும் என்பதால், இந்த திட்டம் தோல்வியடைய வாய்ப்பு உள்ளது.