மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பண்டிட் விஷ்ணு ரஜோரியா பேசுகையில், ‘நாம் நமது குடும்பங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டதால் மதவெறி பிடித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எதிர்கால தலைமுறையின் பாதுகாப்பிற்கு நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். நான்கு குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்கு பரசுராம் வாரியம் ரூ.1 லட்சம் பரிசு வழங்கும். நான் வாரியத் தலைவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், விருது வழங்கப்படும் என கூறியுள்ளார்.