Monday, October 6, 2025

வாட்ஸ்அப்-ஐ அலறவிட்டதா ‘அரட்டை’ செயலி? பயனர்களை கவர களமிறக்கப்படும் புதிய அப்டேட்கள்!

வாட்ஸ்-அப் செயலியில் பயனர்களை ஈர்க்கும் விதமாக மெட்டா நிறுவனம் புதிய அம்சங்களை அறிமுகம் செய்யவுள்ளது. உலகளவில் 300 கோடிக்கு மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்-அப், டெக்ஸ்ட், ஃபோட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளுக்காக பரவலாக பயன்படுகிறது. பள்ளிக்கூடம் முதல் அலுவலகம் வரை, தனிப்பட்ட மற்றும் குழுக் தகவல்தொடர்புகளுக்காக இப்போது இதில் பயனர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

மெட்டா நிறுவனத்தின் இலக்கு, பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு அனுபவத்தை வழங்குவதாகும். அதற்காக தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அப்டேட்களில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Chat  theme-மை customize செய்யும் வசதி, வீடியோ அழைப்பில் Background-டை ஏஐ மூலம் மாற்றும் திறன், மற்றும் செயலியில் இருந்தபடியே போட்டோ, வீடியோக்களில் Background-டை மாற்றும் வசதி ஆகியவை உள்ளன. இந்த அப்டேட்கள் விரைவில் உலகளாவிய பயனர்களுக்கு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முயற்சிக்கு முக்கிய காரணம், சமீபத்தில் இந்தியாவில் ‘அரட்டை’ என்ற மெசேஜிங் ஆப் அதிக வரவேற்பு பெற்றுள்ளதே என கூறப்படுகிறது. ஆப் ஸ்டோரில் ‘மெசேஜிங் ஆப்’ பிரிவில் முன்னிலை பெற்று, டவுன்லோட் எண்ணிக்கையில் வேகமாக உயர்வு காணப்பட்டுள்ளது. இதனால் இந்திய சந்தை மெட்டா உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முக்கியமாக மாறியுள்ளது.

வாட்ஸ்-அப்பில் ‘அரட்டை’ போல அனைத்து அம்சங்களும் இல்லாமலும், பயனர்களை விட்டு விடாமல் தக்க வசதிகளை வழங்குவதே மெட்டாவின் நோக்கம். எனவே புதிய அப்டேட்கள் இந்திய சந்தையிலும், உலகளாவிய பயனர்களிடமும் அதிக ஈர்ப்பை உருவாக்கும் என்று டெக் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News