தகுதியான பெண்களுக்கு செப். 25 முதல் மாதந்தோறும் ரூ. 2100 உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்துள்ளார். இந்தத் திட்டம் தீன் தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளான செப்டம்பர் 25 முதல் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள அனைத்து பெண்களும் மாதந்தோறும் ரூ.2,100 நிதி உதவி பெறுவார்கள். செப்டம்பர் 25 முதல் 23 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பலனடைவார்கள். திருமணமானவர்கள், திருமணமாகாதவர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள்.
ஒரு குடும்பத்தில் மூன்று பெண்கள் தகுதியுடையவர்களாக இருந்தால், மூவரும் இந்தத் திட்டத்தின் பயனைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
