வயிறு நிறைய சாப்பிட்ட பின் குளிர்ச்சியாக ஏதாவது குடித்தால் நன்றாக இருக்குமே என பலரும் நினைப்பதுண்டு.
சூடாக சாப்பிட்ட பிறகு ஐஸ் தண்ணீர், பழச்சாறு, குளிர்பானங்கள் உள்ளிட்டவையை பருகுவது அப்போதைக்கு இதமான உணர்வாக தோன்றினாலும், அதற்குப்பின் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் அதிகம்.
குளிர்ச்சியான திரவத்தை வெதுவெதுப்பாக மாற்ற அதிக கொழுப்பு தேவைப்படுவதால், உணவில் கிடைத்த கொழுப்பு வயிற்றிலேயே தங்கி விடும்.
இதனால், தொப்பை போடும் வாய்ப்புகள் அதிகமாகிறது. உணவில் இருக்கும் கொழுப்பு சத்துக்கள் திடமாக மாற்றப்படுவதால் அஜீரண கோளாறு ஏற்படும்.
குளிர்ச்சியான திரவங்களை பருகும் போது மூளைக்கு செல்லும் ஆக்சிஜென் அளவு குறைவதால் சிலருக்கு மயக்கமான உணர்வு ஏற்படலாம்.
திடீரென குளிர்ச்சியாகும் உடலில், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தாக்கம் ஏற்பட்டு தலைவலி மற்றும் மந்தமான உணர்வு தோன்ற வாய்ப்புள்ளது.
மேலும், மெதுவாகும் இதயத்துடிப்பு, தொண்டை வீக்கம், குடல் எரிச்சலோடு தாக உணர்வும் அதிகரிக்கும்.
இது போன்ற உடல் அசௌகரியங்களை தவிர்க்க உணவு உட்கொண்ட பின் வெதுவெதுப்பான அல்லது அறை வெப்ப நிலையில் உள்ள திரவங்களை பருகுவேதே சிறந்ததாக பார்க்கப்படுகிறது.