கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள DSP அலுவலகத்தில் புகார் கொடுப்பதற்காக பெண் ஒருவர் வந்துள்ளார். மதுகிரியைச் சேர்ந்த டிஎஸ்பி ராமச்சந்திரப்பா புகார் அளிக்க வந்த பெண்ணை கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணயத்தில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த DSP தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.