தூத்துக்குடியிலிருந்து ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண் ஒருவர் முன்பதிவில்லாத பெட்டியில் ஏறி பயணித்தார். அதே பெட்டியில் விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை சேர்ந்த தொழிலாளி சதீஷ்குமார் கோவை செல்வதற்காக இந்த ரயிலில் ஏறினார்.
அதிக மது போதையில் இருந்த அவர் இளம்பெண்ணின் அருகே அமர்ந்திருந்தார். கொடைரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே வரும் போது சதீஷ்குமார், இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த அப்பெண், அருகிலிருந்தவர்களின் உதவியோடு ரயில் பெட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த உதவி எண் 139 எண்ணில் தொடர்பு கொண்டு புகாரளித்தார்.
இதையடுத்து அதிகாலை 3:30 மணிக்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆய்வு செய்த போலீசார் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சதீஷ்குமாரை, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.