கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த சிறுமியை, அரசு பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள், தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் தாயார் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 மாணவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் சிறுவர்கள் என்பதால் சேலத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு மையத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.