தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை பெரும்பாலும் சரிவை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 குறைந்து ரூ.13,300-க்கும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.1,06,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.]
இதன் தொடர்ச்சியாக நேற்று காலை மேலும் ஒரு கிராமுக்கு ரூ.270 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.2,160 குறைந்தது. ஆனால் அதே நாளில் மதிய நேரத்தில் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ.170 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்ததால், மொத்தமாக நேற்று முன்தின விலையுடன் ஒப்பிடுகையில் ஒரு கிராமுக்கு ரூ.100 மற்றும் ஒரு சவரனுக்கு ரூ.800 மட்டுமே குறைவாக இருந்தது. இதனால் ஒரு கிராம் ரூ.13,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,100-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,04,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு தற்போதைய விலைச் சரிவு சற்று நிம்மதியை அளித்துள்ளது. அதேவேளையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
