சேலம் மண்டல பி எஸ் என் எல் பொது மேலாளர் ரவீந்திர பிரசாத் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
சேலம் மண்டலத்தில் தொலைத் தொடர்பு சேவையை மேம்படுத்திடும் வகையில் பிஎஸ்என்எல் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 558 இடங்களில் 4ஜி சேவை கிடைக்கும் வகையிலும் தர்மபுரி மாவட்டத்தில் 341 இடங்களில் 4 ஜி சேவை கிடைக்கும் வகையிலும் பிஎஸ்என்எல் சார்பில் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இதன் மூலம் தங்கு தடையற்ற மற்றும் துல்லியமான சேவையை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக மலைப்பகுதிகளில் மற்ற நிறுவனங்கள் வழங்க முடியாத தொலைதூர கிராமங்களில் கூட 4 ஜி சேவை கிடைக்கும் வகையில் ஏற்காடு கொல்லிமலை ஜருகுமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் 52 கோபுரங்கள் அமைக்கப்பட்டு பிஎஸ்என்எல் சேவை மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் இணையதள சேவை மலை கிராம மக்களுக்கு உறுதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஒரு கோபுரம் வாயிலாக நான் ஒன்றுக்கு 50 ஜிபி வரை இணையதளத்தை மலை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்திடும் வகையில் சேலம் மண்டல பிஎஸ்என்எல் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு ரூபாய் சேவையில் 4ஜி வேகத்தில் பயன்படுத்தக்கூடிய கிரீடம் பிளான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு ரூபாய் செலுத்தி இலவசமாக பிஎஸ்என்எல் சிம் கார்டை பெற்று பயன்படுத்தும் போது நாளொன்றுக்கு இரண்டு ஜிபி வரை இணையதள பயன்பாட்டிற்கும் 100 எஸ்எம்எஸ் சேவையும் வழங்கப்படுகிறது. மேலும் உள்ளூர் மற்றும் வெளியூருக்கான அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று சேலம் மண்டல பிஎஸ்என்எல் பொது மேலாளர் ரவீந்திர பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.