சென்னைவாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்; ஓஎம்ஆர் சாலை மெட்ரோ… முக்கிய அப்டேட் வந்தாச்சு…!

193
Advertisement

சென்னையின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையிலும், பயணம் மேற்கொள்ளும் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் சென்னை மெட்ரோ உள்ளது என்றே சொல்லலாம்.

இந்த மெட்ரோ சேவையை பயன்படுத்துவது பொதுமக்களுக்கு எளிதாக இருப்பதால் தினம் தோறும் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது மெட்ரோ சேவையை விரிவுபடுத்தும் பொருட்டு, இரண்டாம் கட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் முதற்கட்ட மெட்ரோ சேவையானது 54 கி.மீ தொலைவுக்கு இரண்டு வழித்தடங்களில் இயங்கி வருகிறது. விம்கோ நகரிலிருந்து, அண்ணா சாலை வழியாக ஏர்போர்ட் வரை உள்ளது. அடுத்ததாக சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக ஏர்போர்ட் வரை உள்ளது. கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது.

அடுத்த கட்டமாக இந்த மெட்ரோ சேவையை சென்னையில் மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு இரண்டாம் கட்ட பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகின்றன. அதாவது மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் உள்ளன. ரூபாய் 61,843 கோடி மதிப்பில் 116 கி.மீ தொலைவுக்கு அமையப்போகிறது. இதில் 119 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இந்தப் பணிகள் 2026 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இனிமேல் அது கிடையாதாம்… பயணிகளை அப்செட் ஆக்கிய சென்னை மெட்ரோ நிர்வாகம்!