பிறந்தநாள் வாழ்த்துக்கள், கூகுள்! இன்று, செப்டம்பர் 27, உலகின் மிகவும் பிரபலமான Search Engine-க்கு 27 வயதை எட்டுகிறது.
வீட்டில் ஏதேனும் தேவை என்றால் நாம் நிலையில் முதல் வருது “அம்மா”.. அது போல நாம் மூளைக்கு ஏதேனும் ஒரு தகவல் தெரிந்துக்கொள்ள முதலில் வருவது கூகுள். பல ஆண்டுகளாக, கூகுள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது, கிட்டத்தட்ட எதற்கும் பதில்களைக் கண்டறிய உதவுகிறது. நமக்கு சந்தேகம் ஏற்படும் போதெல்லாம், கூகுளில் தேடுகிறோம்.
தற்போது, கூகுள் எவ்வாறு தொடங்கியது, யார் அதை உருவாக்கியது, அதன் பெயரின் உண்மையான அர்த்தம் என்ன, இன்று அதன் உரிமையாளர் யார், அது அதன் 27வது பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுகிறது என்பதைப் பார்ப்போம்!!
செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் முதன் முதலில் ஜனவரி 1997 இல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருவரும் படித்துக் கொண்டு இருந்த போது சந்தித்த போது, செர்ஜி பிரின் Ph.D மாணவராக இருந்தார், பல்கலைக்கழகத்தில் உள்ள மூத்த மாணவர்கள் ஸ்டான்போர் பல்கலைகழகத்தில் படிப்பதற்காக வரும் புதிய மாணவர்களுக்கு வளாகத்தைச் சுற்றிக்காட்டவும், வழிக்காட்டியாகவும் இருக்க நிர்வாகம் லாரி பேஜை உடன் செர்ஜி பிரின் இணைத்தது.
இதில் இருந்து செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் நட்பு வளர்ந்தது மட்டும் அல்லாமல் கூகுள் உருவாகவும் அடிப்படையாக இருந்தது. கூகுள் துவங்க வேண்டும் என்று திட்டமிட்ட போது இருவரும் அனைத்து கருத்துக்களிலும் முரண்பட்டனர். ஒவ்வொரு விஷயத்தையும் சண்டை போட்டு தான் துவங்கியுள்ளது. முதல் சந்திப்பை தொடர்ந்து ஒரு வருடம் கழித்து, இருவரும் ஒன்றாக சேர்ந்து, தங்களுடைய தங்குமிட அறைகளில் இருந்து ஒரு சர்ச் இன்ஜின்-ஐ உருவாக்கத் தொடங்கினர். மேலும், அவர்கள் தங்கள் முதல் முன்மாதிரியை வெற்றிகரமாக உருவாக்கினர். செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ்-ன் கண்டுபிடிப்பு சிலிக்கான் வேலியில் உள்ள முக்கிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. இந்த நிலையில் தான் ஆகஸ்ட் 1998 இல், சன் மைக்ரோசிஸ்டம்ஸின் இணை நிறுவனர் ஆண்டி பெக்டோல்ஷெய்ம், செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோருக்கு $100,000 காசோலையை வழங்கினார்.
கூகுளின் முதல் அதிகாரப்பூர்வ பெயர் Backrub, இதற்கு முக்கிய காரணம் இணையத்தில் உள்ள இணைய பக்கங்களின் பேக் லிங்க் அடிப்படையில் ஒரு இணையத்தளத்தின் மதிப்பீடு செய்யும் முறையை இவர்களுடைய சர்ச் இன்ஜின் கொண்டிருந்த காரணத்தால் Backrub என பெயர் பெற்றது. பின்பு பொது சந்தையில் பலரையும் கவரும் வகையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என திட்டமிட்டு 1 என்ற எண்ணுக்கு அருகில் 100 ஜீரோ வரும் எண்ணுக்கு கூகுள் என அழைக்கப்பட்டதை படித்தனர். இது மிகவும் பிடித்து போக செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் Backrub என்ற பெயரை கூகுள் என மாற்றப்பட்டது. கூகுள்.காம் என்ற இணைய தளம் செப்டம்பர் 15, 1997 தேதி ரிஜிஸ்டர் செய்யப்பட்டாலும், செப்டம்பர் 1998 வரையில் இந்த சர்ச் இன்ஜின் பக்கம் துவங்கப்படவில்லை. இதன் பின்பு சில தடுமாற்றம் இருந்தாலும் பல சர்ச் இன்ஜின்களை ஓடவிட்டு இன்று அசைக்க முடியாத நிறுவனமான உருவெடுத்துள்ளது. கூகுள் 1999 ஆம் ஆண்டு தற்போது இருக்கும் கலிப்போர்னியாவின் Mountain View பகுதியில் அமைத்திருக்கும் Googleplex தலைமையகத்திற்கு மாறியது. கடந்த 27 வருட வரலாற்றில் 50 நாடுகளில் 78 அலுவலகங்கள் உடன் சுமார் 1.5 லட்சம் ஊழியர்கள் உடன் இயங்கி வருகிறதுஎன்று சொல்லப்படுகிறது.
இன்று கூகுள் யாருக்குச் சொந்தமானது என்று தெரியுமா?
கூகுள் இப்போது 2015 இல் உருவாக்கப்பட்ட ஒரு ஹோல்டிங் நிறுவனமான ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். கூகிளின் முக்கிய வணிகங்கள் மற்றும் வேமோ மற்றும் வெரிலி போன்ற பிற சோதனை திட்டங்களை ஆல்பாபெட் மேற்பார்வையிடுகிறது.
ஆல்பாபெட் பொதுவில் வர்த்தகம் செய்யப்பட்டாலும், பேஜ், பிரின் மற்றும் ஒரு சில உள் நபர்கள் அதிக வாக்களிக்கும் சக்தியை வழங்கும் சிறப்புப் பங்குகளை வைத்திருக்கிறார்கள்.
பேஜ் மற்றும் பிரின் ஆகியோர் குழு உறுப்பினர்களாகவே உள்ளனர், ஆனால் அன்றாட நடவடிக்கைகளை கூகிள் மற்றும் ஆல்பாபெட் இரண்டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை நடத்துகிறார்.
கூகுள் தனது பிறந்தநாளை எப்படி கொண்டாடுகிறது?
தனது 27வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், கூகுள் தனது தேடல் முகப்புப் பக்கத்தில் ஒரு சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு, கூகுள் நிறுவனத்தின் முதல் லோகோவை மீண்டும் கொண்டு வருகிறது, இது 1998 ஆம் ஆண்டு நிறுவனம் எவ்வாறு தொடங்கியது என்பதைப் பற்றிய ஒரு பழமையான தோற்றத்தை பயனர்களுக்கு வழங்குகிறது.
BIRTHDAY27 என்ற குறியீட்டைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு கூகிள் ஸ்டோர் 20 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. பிக்சல் 9, பிக்சல் 9a, பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட், பிக்சல் பட்ஸ் ப்ரோ 2, பிக்சல் வாட்ச் 3 மற்றும் ஃபிட்பிட் சார்ஜ் 6 போன்ற சாதனங்களில் மக்கள் சேமிக்கலாம். சில கொள்முதல்கள் ஸ்டோர் கிரெடிட், பிரத்யேக ஸ்டிக்கர்கள் வருகின்றன. தள்ளுபடிகள் செப்டம்பர் 28 வரை கிடைக்கும் என்று தெரிவிக்கிறது.
ஏதேனும் தகவல்களை வேண்டுமென்றால் கூகுளில் தேடி உறுதி செய்திகொள்ளவும்..