ஹன்சிகா கல்யாணத்த OTTயில் பார்க்கலாம்! ரசிகர்கள் மகிழ்ச்சி

221
Advertisement

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, தனது காதலர் சோஹைல் கத்தூரியா தனக்கு Eiffel Towerக்கு முன் வைத்து ப்ரொபோஸ் செய்த புகைப்படங்களை நவம்பர் 2ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், சிறுவயதில் இருந்து தனது நண்பரான சோஹைலை ஹன்சிகா டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள முன்டோட்டா கோட்டையில் நடைபெற உள்ள இந்த கல்யாணத்தை, முன்னதாக ஒரு பிரபல OTT தளத்தில் நேரலை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது ஹன்சிகா திருமணத்தை ஒளிபரப்ப இரண்டு OTT தளங்கள் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், திருமணம்  நேரலை செய்யப்படாமல் பின்னதாக ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.