Sunday, October 5, 2025

எச்.ராஜா நடித்துள்ள படத்தின் பாடல் வெளியீடு!!

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நடித்துள்ள திரைப்படம் கந்தன் மலை. சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது பெரு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இப்படத்தின் first look poster-ரில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

மேலும் திரைப்படத்தின் போஸ்டரில் அவருக்கு ‘தர்மபோராளி’ என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அவரது தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News