Monday, February 2, 2026

ஹெச்.ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு., மருத்துவமனை சொன்ன அதிர்ச்சி தகவல்

பாஜக மூத்த தலை​வர் மற்​றும் தேசி​யக் குழு உறுப்​பினர் ஹெச்.ராஜா (68), நேற்று முன்​தினம் சென்னை கிண்​டி​யில் உள்ள தனி​யார் தொலைக்​காட்சி நிகழ்ச்சி பங்​கேற்​ற​போது திடீரென மயங்கி விழுந்​தார்.

இதையடுத்து, அவர் அரு​கில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு முதல்​கட்ட சிகிச்​சைகள் அளிக்​கப்​பட்​டன. பின்​னர், அவர் மேல் சிகிச்​சைக்​காக சென்னை ஆயிரம் விளக்​குப் பகுதி கிரீம்ஸ் சாலை​யில் உள்ள அப்போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார்.

இந்​நிலை​யில், அப்போலோ மருத்​து​வ​மனை​யின் இயக்​குநர் (மருத்​துவ சேவை​கள்) பி.ஜி.அனில் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், “பாஜக மூத்த தலை​வர் ஹெச்.ராஜா பக்​க​வாத பாதிப்​புக்​காக (Stroke) மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. அவர் குடும்​பத்​தினர் மற்​றும் நண்​பர்​களு​டன் பேசக்​கூடிய வகை​யில் நலமுடன் உள்​ளார்” என்று தெரி​வித்​துள்​ளார்.

Related News

Latest News