அமெரிக்காவில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு துப்பாக்கிகளை விற்க கூடாது என்று அந்நாட்டு பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. ஏற்கனவே, கடந்த 2012ம் ஆண்டில் அமெரிக்காவில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு துப்பாக்கிகளை விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து சிலர் மேல்முறையீடு செய்ததால், சட்டங்களை மறுஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு துப்பாக்கிகளை விற்க கூடாது என்று அந்நாட்டு பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கிகளுக்கான கட்டுப்பாடுகள், நாட்டின் பாரம்பரிய கலாசாரத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.