Wednesday, February 5, 2025

குவியும் பரிசுத்தொகை : ரூ.11.45 கோடி பரிசுத் தொகை வென்ற குகேஷ்

இந்தியாவை சேர்ந்த குகேஷ், செஸ் உலகில் இளம் சாம்பியன் ஆகி புதிய சாதனை படைத்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச போட்டிகளில் விளையாடி உலக சாம்பியன் பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்குப் பிறகு, உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். 

குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பரிசுத்தொகை குகேஷ்க்கு கிடைத்துள்ளது. அதன் படி உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழக வீரர் குகேஷுக்கு, சர்வதேச செஸ் சம்மேளனம் ரூ.11.45 கோடி வழங்குகிறது.

Latest news