குஜராத்தின் மொத்த பொதுக் கடன் 3.77 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த 2 நிதியாண்டுகளில், நிதி நிறுவனங்களிடம் இருந்து ரூ.10,463 கோடியை கடனாக பெற்றுள்ளதாக அம்மாநில அரசு சட்டப்பேரவையில் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது 3.77 லட்சம் கோடியாக உள்ள குஜராத் அரசின் கடன் 2024-25ல் ரூ.3.99 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், குஜராத் மக்கள் ஒவ்வொருவரின் மீதும் ரூ.66 ஆயிரம் கடன் சுமையை பாஜக ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
வளர்ச்சி என்ற போர்வையில் மக்களின் கவனத்தை திசை திருப்பி மாநிலத்தை கடனில் தள்ளியுள்ளது என்றும், 2025-26க்குள் மாநிலத்தின் கடன் ரூ.4.55 லட்சம் கோடியை எட்டும் எனவும் குஜராத் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.