குஜராத்தில் இன்று தொடங்குகிறது தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு

250

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், குஜராத்தில் இன்றும், நாளையும் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இதில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் மற்றும் கல்வித்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில், நாட்டில் கல்விச் சூழலை வலுப்படுத்துவது, புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.