நாட்டை உலுக்கிய விமான விபத்து : 241 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலத்தில் 242 பயணிகளுடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் உயிரிழந்ததாக ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த விபத்தில் விஷ்வாஸ் குமார் என்ற பயணி ஒருவர் மட்டும் உயிர்தப்பினார் என்றும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related News

Latest News