மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் முகத்தில் அதிக முடி கொண்டவராக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் .
லலித் படிதார் என்ற இளைஞர் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 201.72 முடியுடன் வியக்கத்தக்க சாதனை படைத்துள்ளார். ஹைப்பர் டிரிகோசிஸ் என்று அழைக்கப்படும் அரிய மருத்துவ நிலை காரணமாக லலித் படிதார் முகத்தில் 95 சதவீதத்திற்கும் அதிகமான முடி உள்ளது.
கின்னஸ் உலக சாதனை தரவுகளின் படி, உலகளவில் பதிவான சுமார் 50 ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகளில் படிதார் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.