டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழக அரசின் காலியான இடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில் குரூப்-1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உட்பட ஏழு போட்டி தேர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குரூப்-1, குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் கூறியுள்ளார்.
அரசு துறைகளிடமிருந்து காலியிடங்களின் விபரம் மார்ச் மாத இறுதிக்குள் கிடைக்கும். இதன் அடிப்படையில், தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடும்போது, காலியிடங்களின் முழு விபரமும் அதில் குறிப்பிடப்படும்.
தேர்வர்கள் சிறிதும் குழப்பமில்லாமல் விடைத்தாள் நிரப்பும் வகையில், புதிய எளிமையான நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் விரைவாகவும் தவறின்றி வெளியிடப்பட வேண்டும் என்பதில் டிஎன்பிஎஸ்சி உறுதியுடன் செயல்பட்டு வருவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் கூறியுள்ளார்.